உண்மை! உழைப்பு!! உயர்வு!!!

Saturday 5 May 2012

கீழக்கரை நகர்மன்ற கூட்டம் - கவுன்சிலர்கள் விவாதம்:


கீழக்கரை நகராட்சி நகர்மன்ற அவசர கூட்டம் 03.05.2012 மாலை 4.00 மணிக்கு தொடங்கியது. நகர்மன்ற தலைவர் ஜனாபா ராவியத்துல் கதரியா தலைமை வகித்தார்.
கூட்ட பொருள் அஜந்தா நகல் 02.05.2012 இரவு 8.00 மணிக்கு கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டதை கண்டித்து அனைத்து கவுன்சிலர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். மேலும், இது போல் தவறு இனிமேல் நடக்காது. கூட்டத்துக்கு மூன்று நாட்களுக்கு முன் அஜந்தா நகல் வழங்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.
கீழக்கரை நகராட்சியின் 1 முதல் 21 வார்டு பகுதிகளுக்கும் கீழக்கரை நகராட்சியின் பொது நிதியில் 40 லட்சம் ரூபாய்க்கு அத்தியாவசிய திட்ட பணிகள் நடக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கடந்த 02.03.2012 ம் தேதி நடைபெற்ற IUDM திட்டபணி சம்மந்தமான ரூ 2 கோடி டெண்டர் நடைபெற்றதை மன்றம் அங்கிகரீத்து ஒப்புதல் வழங்கப்பட்டது.
12.04.2012 ம் தேதி IUDM தெரு விளக்கு சம்மந்தமான ரூ 50 லட்சம் டெண்டர் நடைபெற்றதில் மூன்று டெண்டெர்கள் வந்துள்ளதை மன்றம் பரீசீலனை செய்தது. இந்த டெண்டரை நிராகரித்து விட்டு மறு டெண்டர் நடத்த நகர்மன்ற தலைவர் முடிவு செய்ததை பல கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்தனர். இதை தொடர்ந்து நகர்மன்ற கூட்டம் கலை கட்டியது.
20 வது வார்டு கவுன்சிலர் A.H. ஹாஜா நஜ்முதின் கூறுகையில்:
டெண்டர் விதி முறைப்படி குறைந்த தொகை பதிவு செய்துள்ள ஒப்பந்ததாதருக்கு டெண்டரை அங்கீகரிப்பது தானே நடைமுறையில் உள்ளது. ஆகவே குறைந்த ஒப்பந்தபுள்ளி பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரருக்கு டெண்டரை அனுமதிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.


21 வது கவுன்சிலர் D.ஜெயபிரகாஷ் அவர் கூறுகையில்:
      IUDM தெரு விளக்கு சம்மந்தமான டெண்டரில் 3 நிறுவனங்கள் டெண்டர் பதிவு செய்துள்ளார்கள். இதில் குறைந்த டெண்டர் பதிவு செய்துள்ள மலானி லைட்டிங்க் அன் கோ, திருநெல்வேலி கடந்த 2010-2011 ஆம் வருடம் பதிவு செய்துள்ளார்கள். இவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் டெண்டர் போடுவதற்கு டெக்னிக்கல் தகுதி இல்லை. அடுத்த படியாக அதிக அளவு தொகை பதிவு செய்துள்ள நம்புராமலிங்கம் இராமேஸ்வரம் வெளி மார்க்கெட்டில் தான் சம்மந்தமான பொருட்கள் வாங்கி சப்ளை செய்து வருகின்றார். இரண்டாவது டெண்டர் பதிவு செய்துள்ள M/S, வால்மாண்ட் ஸ்ட்ரக்சர் பி.லிட், சென்னை. நிறுவனம் தான் உலக தரம் வாய்ந்த நிறுவனம். இவர்களுக்கு உலக நாடுகளில் 64 இடங்களில் சொந்த அலுவலகங்கள் உள்ளது. எலக்ட்ரிக்கல் பொருள்கள் தயார் செய்வதற்கு சென்னையில் தொழிற்சாலை உள்ளது. இந்த கம்பெனியின் இணையதளத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. ஆகவே, இந்த நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்த புள்ளியை அனுமதிக்க வேண்டும். என்று விளக்கமளித்தார்.

நகர்மன்ற தலைவர் இந்த டெண்டரை நிராகரித்து விட்டு மறு டெண்டர் நடத்தவேண்டும் என்று கூறினார். நகர்மன்ற தலைவரின் இந்த கருத்துக்கு கவுன்சிலர்களிடையே பெரியளவு எதிர்ப்பு ஏற்ப்பட்டது. நடைபெற்ற டெண்டரை அங்கீகரித்து ஒப்ப்ந்தபுள்ளி பதிவு செய்துள்ள மூன்று நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் யாருக்காவது ஒரு நிறுவனத்திற்கு டெண்டரை உறுதி செய்ய வேண்டும். மறு டெண்டர் நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். டெண்டர் மூலம் வீண் விளம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படக்கூடாது என்று பல நகர்மன்ற கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து குறைந்த டெண்டர் பதிவு செய்த மலானி லைட்டிங்க் அன் கோ, திருநெல்வேலி. இந்த நிறுவனத்திற்கு டெண்டரை அங்கீகரித்து நகர்மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.