கீழக்கரை
நகராட்சியில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை / அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதை
உடன் நிரப்ப கோரியும் / பல வருடங்கள் தொடர்ச்சியாக கீழக்கரை நகராட்சியில் பணியில் உள்ள
பணியாளர்களை பணி இடம் மாற்றம் செய்யக்கோரியும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் நகர்மன்ற
தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக உள்ளதாக குற்றசாட்டுகள் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை
தமிழக அரசு உடன் நிறைவேற்ற கோரி கீழக்கரை நகர்மன்ற கவுன்சிலர் 10 பேர்கள்
02.05.2012 புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதிய பேரூந்து நிலையம் அருகே
உண்ணாவிரதம் இருந்தனர்.
நகர்மன்ற
கவுன்சிலர் அனைவரிடமும் பேட்டி எடுத்த தொலைகாட்சி நிரூபர்கள் செய்திகளை தொலைக்காட்சியில்
உடனே செய்தி வெளியிட்டனர். இந்த உண்ணாவிரதம் மூலம் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு
சென்றடைந்துள்ளது.
இது குறித்து 5வது வார்டு கவுன்சிலர் M. சாகுல்
ஹமீது mc அவர்கள் கூறியதாவது:
நாங்கள்
கவுன்சிலர் பொறுப்புக்கு வந்து 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் எங்கள் வார்டு மக்களுக்கு
எந்த ஒரு பணியும் செய்ய முடியவில்லை. கீழக்கரை நகராட்சியில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள்
யாரும் இல்லாதது தான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். அடுத்த படியாக நகர்மன்ற தலைவரின்
கணவர் அமிர் ரிஸ்வான் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் அதிகமாக தலையிடுவதால் அனைத்து
நகர்மன்ற கவுன்சிலர்களும் மட்டம் தட்டபடுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக ஒரே ஊரில் பணியில்
உள்ள துப்புரவு பணி மேற்பார்வையாளர் V.
மனோகரன் எந்த கவுன்சிலரையும் மதிப்பதில்லை.
நகர்மன்ற தலைவரின் கணவர் சொன்ன வேலையை மட்டுமே செய்து வருகின்றார். இதனால் கவுன்சிலர்களின்
நிலைமை கேள்விக்குரியாக உள்ளது. இதனால் முதல் கட்டமாக இந்த உண்ணாவிரதத்தை நடத்தியுள்ளோம்.மேலும், கீழக்கரை நகர்மன்ற நிலைமை மாறவில்லை என்றால் இன்னும் பல போராட்டங்களை நடத்துவோம்.
உண்ணாவிரதம் பற்றி 18 வது வார்டு கவுன்சிலர் M.U.V முகைதீன் இப்ராகிம் அவர்கள் கூறியதாவது:
கீழக்கரை நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளையும் இந்த நிர்வாக சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நகர்மன்ற தலைவரின் கணவர் அமிர் ரிஸ்வான் கண்டித்தும் இந்த உண்ணாவிரதத்தை 10 கவுன்சிலர்கள் நடத்தியுள்ளோம்.
நகர் நலனை கருத்தில் கொண்டும் கீழக்கரை நகரட்சிக்கு உயர் அதிகாரிகளை உடனே நியமிக்க கோரியும் தொடர்ந்து கீழக்கரை நகராட்சியில் பல வருடங்களாக பணி இடமாற்றம் இல்லாமல் உள்ள பணியாளர்களை இடம் மாற்றம் செய்யக்கோரியும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளோம். மேலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால் கீழக்கரை நகராட்சியை கண்டித்து அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment