உண்மை! உழைப்பு!! உயர்வு!!!

Tuesday, 24 April 2012

கீழக்கரையின் அவல நிலை 5வது வார்டு கவுன்சிலர் M.சாகுல் ஹமீது குமுறல்:தற்போது கீழக்கரையில் பெய்த மழையால் கீழக்கரை நகர் முழுவதும் வாருகால்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதற்கு காரணம் நகராட்சியின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என அவர் கூறியுள்ளார். இப்புகைப்படத்தில் இருக்கும் பகுதிகளான பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் கடற்கரை பகுதிகளாகும். இதனை நகராட்சி நிர்வாகம் நிவர்த்தி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் கூறுகையில்:-
 மக்கள் பணியே மறுமையில் பலன். என தெரிவித்தார்.

Sunday, 22 April 2012

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்

 தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கிகரிக்கப்பட்ட பயோனியர் மருத்துவமனை (இராமநாதபுரம்) நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று 22.04.2012 காலை 10 மணியளவில் கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் ப்ள்ளி வளாகத்தில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் H. ஹாஜா முகைதீன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

பயோனியர் மருத்துவமனை டாக்டர் திருமதி R.சித்திர ஜோதி MBBS அவர்கள், மருத்துவமனை செயலாளர்கள் S. ஜெயா, R. கற்பக வாணி,  S. ஜனனி , N. உமாதேவி, K. ஹேமபிரியா பயோனீர் மேனேஜர் M.C வைரவ தேவி தகவல் தொடர்பு அதிகாரிகள் S.A முகம்மது மதார் சாகிபு, R.S. நாக குமார் ஆகிய அனைவரும் சிறப்பான மருத்துவ பரிசோதனையை நகர் மக்களுக்கு வழங்கினார்கள்.                                              

தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. R.சுரேஷ் குமார் இலவச மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினார்.
இலவச மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் H. ஹாஜா முகைதீன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நகர்மன்ற க்வுன்சிலர்கள் SA. அன்வர் அலி MC, சாகுல் ஹமீது MC, K. செய்யது கருணை MC, மற்றும் MUV முகைதீன் இப்ராகிம் MC ஆகியோர் அவர்களது சிறப்பான சேவையை செய்தனர்.

Monday, 9 April 2012

கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கு பகுதி சாலை அமைக்கும் பணி நிறைவு பெறுகின்றது:


 2008-2009 ஆம் ஆண்டு டெண்டர் கொடுக்கப்பட்ட உரக்கிடங்கு கீழக்கரை நகராட்சி குப்பைக் கொட்டும் இடம் சுற்றுச் சுவர் கட்டும் பணி மற்றும் ECR சாலை முதல் உரக்கிடங்கு வரை  11/2km தார் சாலை அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது புதிய நகர்மன்ற தேர்வுக்கு பின் திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு
வருகின்றன.

ரூ.53.50லட்சம் செலவில் கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கு முதல் ECR  சாலை வரை11/2km நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி இன்று நிறைவு பெறுகின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் உரக்கிடங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியும் நிறைவடையும்.