உண்மை! உழைப்பு!! உயர்வு!!!

Friday 9 March 2012


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அன்புடையீர்,
              கீழக்கரை நகரின் மிக முக்கியமான பொது சுகாதார பிரச்சனையான குப்பைகள் கொட்ட இடமில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. கீழக்கரை நகராட்சியில் கடந்த நிர்வாகத்தால் கிடப்பில் போடப்பட்டு இருந்த உரக்கிடங்கு (குப்பைகள் கொட்டும் இடம்) சுற்றுசுவர் கட்டும் பணியை நகர் மக்களின் நலனை கருத்தி ல்கொண்டு  மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணைப் படி நகர்மன்ற துணைத்தலைவர் ஜனாப் H.ஹாஜா முகைதீன் அவர்கள், நகர்மன்ற தலைவர் ஜனாபா ராவியத்துல் கதரியா அவர்கள் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் அவர்களுடைய கூட்டு முயற்சியால் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.  

            கீழக்கரை நகர் மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இவர்களின் சிறப்பான பணி தொடர அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்வோம். 
வெளிநாடுகளில் பணியில் உள்ள நம் சகோதரர்கள் கீழக்கரை நகர் மக்களுக்காக கீழக்கரை நகராட்சி மூலம் நடைபெறும் திட்டப்பணிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள kilakaraivicechairman.blogspot.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. என்பதை இத்தருணத்தில் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
    இவண்,
 லெப்பைதம்பி          




                                                        

         
கீழக்கரை நகராட்சியின் உரக்கிடங்கு (குப்பைகள் கொட்டும் இடம்) சுற்று சுவர் கட்டுமானப் பணியை பார்வையிடும் கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் H.ஹாஜா முகைதீன்.

7 comments:

  1. one personal request,pls change the advicer.thanks

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!நற்செயலாற்ற வல்ல இறைவன் என்றும் துணை நிற்பானாக!

    ReplyDelete
  3. unkal thalam menmelum valara ennutaiya valththukkal

    ReplyDelete
  4. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  5. Dear Labi Tambi Kaka,

    Insha Allah.
    Ungal muyarchi vetri pera nal vaalthukal


    ur tambi
    M.K.Jamaludeen

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமதுல்லாஹி வ பரகாத்தஹு"

    இன்ஷா அல்லாஹ்

    நம் கீழக்கரை நகரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ... "இருட்டடிப்பு செய்யும் செய்திகளை உண்மையின் வெளிச்சத்தில் ஒளி ஏற்ற ....." உங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.

    ReplyDelete