உண்மை! உழைப்பு!! உயர்வு!!!

Wednesday, 21 March 2012

வடக்கு தெரு தைக்காவில் இன்று மருத்துவ காப்பீட்டு திட்ட கார்டு வினியோகம்:


     கீழக்கரை நகரில் முதலமைச்சரின் அரசு காப்பீட்டு திட்ட கார்டு தொடர்ந்து நகர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. கீழக்கரை வடக்கு தெரு தைக்காவில்  வைத்து கார்ர்டுகள் வழங்கப்பட்டன. இதனை 20வது வார்டு கவுன்சிலர் ஜனாப் A.Hஹாஜா நஜ்முதீன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.  


      கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் ஜனாப் H. ஹாஜா முகைதீன் அவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஜனாப் S.A அன்வர் அலி, ஜனாப் M.சாகுல் ஹமீது, ஜனாப் MUV. முகைதீன் இப்ராகீம், திரு. D.ஜெயப்பிரகாஷ், ஜனாபா M.S முகம்மது மஜிதா பீவி ஆகியோர் உதவிகரமாக இருந்து பணியாற்றினார்கள். வடக்கு தெருவை சேர்ந்த பொது நலப்பணிகள் செய்து வரும் ஜனாப் வாஹித் அவர்கள் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்தார்கள்.

கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கு(குப்பை கொட்டும் இடம்) கட்டும் பணி தீவிரம்:


துணைத்தலைவர்
 H.ஹாஜா முகைதீன்
21 வது வார்டு கவுன்சிலர்
D.ஜெயப்பிரகாஷ்கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கு ரூ. 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் இப்பணி முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. ரூ. 53 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் கீழக்கரை நகர் முழுவதும் குப்பைகள் தினசரி அகற்றப்ப்ட்டு சுகாதாரம் முழுமையாக அமுல்படுத்தப்படும்.