கீழக்கரை நகராட்சியின் நகர் மன்ற கூட்டம் நேற்று மாலை 22.03.2012 மாலை 4 மணிக்கு துவங்கியது. நகர்மன்ற தலைவர் S. ராவியத்துல் கதரியா அவர்கள் தலைமை வகித்தார். கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜீபுர் ரஹ்மான் (பொறுப்பு) முன்னிலை வகித்தார். கீழக்கரை நகர் மன்ற துணைத்தலைவர் H. ஹாஜா முகைதீன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
A.H. ஹாஜா நஜ்முதீன் M.C:
20வது வார்டு கவுன்சிலர் A.H. ஹாஜா நஜ்முதீன் மொட்டை அடித்துக் கொண்டு தலையிலும் வாயிலும் ரூ 1000/- மற்றும் ரூ500/- நோட்டை ஒட்டிக்கொண்டு 100 நோட்டுக்களை மாலையாக கழுத்தில் போட்டுக்கொண்டு கூட்டத்திற்கு வருகை தந்தார். இது சம்மந்தமாக அவரிடம் கேட்டபோது:- கடந்த நகர் மன்ற நிர்வாகத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அது இந்த நிர்வாகத்திலும் தொடர்வதாக தெரிகின்றது. அதனை கண்டித்து தான் நான் என்னுடைய எதிர்ப்பை இவ்வாறு தெரிவிக்கின்றேன் என்றார்.
M.சாகுல் ஹமீது M.C:
5வது வார்டு கவுன்சிலராக உள்ள M.சாகுல் ஹமீது அவர்கள் தலையில் தண்ணீர் மேல்நிலை தொட்டி பொருத்தப்பட்ட நிலையில் வந்தார். அதில் சாக்கடை கலந்த குடிநீர் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக அவர் கூறியதாவது:- கீழக்கரை நகர் மக்களுக்கு காவேரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் கழிவு நீர் கலந்து வருகின்றது. இது சம்மந்தமாக பல புகார் மனுக்கள் கமிஷனரிடம் வழங்கியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவேஎன்னுடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்காக நான் இவ்வாறு வந்துள்ளேன் என்று கூறினார்.18வது வார்டு கவுன்சிலர் M.U.V முகைதீன் இப்ராகீம் மன்ற கூட்டத்தில் விவாதம் செய்யும் போது கீழக்கரையில் பெரும்பானமையான மக்கள் வறுமைக்கோட்டிற்க்கு கீழ் வாழ்வதால் தற்போது செயல்படுத்த உள்ள கூடுதல் வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
நகர் மன்ற தலைவர் தனக்கு துணை போகும் வார்டு உறுப்பினர்களின் வார்டுகளை மட்டுமே பார்ப்பதாக பல கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்கள். நகர்மன்ற தலைவர் கீழக்கரை நகரின் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இவர் சில குறிப்பிட்ட வார்டுகளுக்கு பணி செயவது எந்த விததிலும் நியாயமில்லை. என்வே அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஏற்று நகர் மன்ற தலைவர் செயல்பட வேண்டும்.