உண்மை! உழைப்பு!! உயர்வு!!!

Saturday 24 March 2012

கவுன்சிலர் M.சாகுல் ஹமீது அறிக்கை:

கீழக்கரை ஒரு வார்டு உறுப்பினரை மிகவும் புகழ்ந்து ஒரு இனையதளத்தில் செய்திகள் வருகின்றது. இவர் ஒருவர் தான் மக்களுக்கு சேவை செய்கின்றாராம். மற்ற கவுன்சிலர்கள் அனைவரும் படுத்து தூங்குகின்றார்களாம். கடற்கரையில் மண்டிக்கிடக்கும் குப்பைகளை தனது கேமரா மூலம் படம் பிடித்து தினகரன் நிரூபர் வெளியிட்டு இருக்கின்றார். தற்போதைய கீழக்கரை கடற்கரை நிலவரம் அனைவரும் அறிந்ததே.உண்மையான  செய்திகளை பத்திரிக்கை வாயிலாக வெளியிடுவதால் கீழக்கரை நகருக்கு பல நன்மைகள் நடந்து வருவதை அனைவரும் அறிந்ததே. சில முட்டாள் கவுன்சிலர்களுக்கு இது தெரியாதா? அது சரி போதையில் தென்னந்தோப்பில் படுத்து கிடக்கும் இவர்களுக்கு ஊருக்குள் நடப்பது எப்படி தெரியும்? இவ்வாறு 5-வது வார்டு கவுன்சிலர் ஜனாப்.M. சாகுல்ஹமீது அவர்கள் கூறினார்.


Thursday 22 March 2012

கீழக்கரை நகர் மன்ற கூட்டத்தில் ருசீகரம்:

கீழக்கரை நகராட்சியின் நகர் மன்ற கூட்டம் நேற்று மாலை 22.03.2012 மாலை 4 மணிக்கு துவங்கியது. நகர்மன்ற தலைவர் S. ராவியத்துல் கதரியா அவர்கள் தலைமை வகித்தார். கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜீபுர் ரஹ்மான் (பொறுப்பு) முன்னிலை வகித்தார். கீழக்கரை நகர் மன்ற துணைத்தலைவர் H. ஹாஜா முகைதீன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


A.H. ஹாஜா நஜ்முதீன் M.C:
20வது வார்டு கவுன்சிலர் A.H. ஹாஜா நஜ்முதீன் மொட்டை அடித்துக் கொண்டு  தலையிலும் வாயிலும் ரூ 1000/- மற்றும் ரூ500/- நோட்டை ஒட்டிக்கொண்டு 100 நோட்டுக்களை மாலையாக கழுத்தில் போட்டுக்கொண்டு கூட்டத்திற்கு வருகை தந்தார். இது சம்மந்தமாக அவரிடம் கேட்டபோது:- கடந்த நகர் மன்ற நிர்வாகத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அது இந்த நிர்வாகத்திலும் தொடர்வதாக தெரிகின்றது. அதனை கண்டித்து தான் நான் என்னுடைய எதிர்ப்பை இவ்வாறு தெரிவிக்கின்றேன் என்றார். 

M.சாகுல் ஹமீது M.C:
                   
 5வது வார்டு கவுன்சிலராக உள்ள M.சாகுல் ஹமீது அவர்கள்  தலையில் தண்ணீர் மேல்நிலை தொட்டி பொருத்தப்பட்ட நிலையில் வந்தார். அதில் சாக்கடை கலந்த குடிநீர் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக அவர் கூறியதாவது:- கீழக்கரை நகர் மக்களுக்கு காவேரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் கழிவு நீர்  கலந்து வருகின்றது. இது சம்மந்தமாக பல புகார் மனுக்கள் கமிஷனரிடம் வழங்கியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவேஎன்னுடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்காக நான் இவ்வாறு வந்துள்ளேன் என்று கூறினார்.

                                                   18வது வார்டு கவுன்சிலர் M.U.V முகைதீன் இப்ராகீம் மன்ற கூட்டத்தில் விவாதம் செய்யும் போது கீழக்கரையில் பெரும்பானமையான மக்கள் வறுமைக்கோட்டிற்க்கு கீழ் வாழ்வதால் தற்போது செயல்படுத்த உள்ள கூடுதல் வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

                                         நகர் மன்ற தலைவர் தனக்கு துணை போகும் வார்டு உறுப்பினர்களின் வார்டுகளை மட்டுமே பார்ப்பதாக பல கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்கள். நகர்மன்ற தலைவர் கீழக்கரை நகரின் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இவர் சில குறிப்பிட்ட வார்டுகளுக்கு பணி செயவது எந்த விததிலும் நியாயமில்லை. என்வே அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஏற்று நகர் மன்ற தலைவர் செயல்பட வேண்டும்.

                                                  




Wednesday 21 March 2012

வடக்கு தெரு தைக்காவில் இன்று மருத்துவ காப்பீட்டு திட்ட கார்டு வினியோகம்:


     கீழக்கரை நகரில் முதலமைச்சரின் அரசு காப்பீட்டு திட்ட கார்டு தொடர்ந்து நகர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. கீழக்கரை வடக்கு தெரு தைக்காவில்  வைத்து கார்ர்டுகள் வழங்கப்பட்டன. இதனை 20வது வார்டு கவுன்சிலர் ஜனாப் A.Hஹாஜா நஜ்முதீன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.  


      கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் ஜனாப் H. ஹாஜா முகைதீன் அவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஜனாப் S.A அன்வர் அலி, ஜனாப் M.சாகுல் ஹமீது, ஜனாப் MUV. முகைதீன் இப்ராகீம், திரு. D.ஜெயப்பிரகாஷ், ஜனாபா M.S முகம்மது மஜிதா பீவி ஆகியோர் உதவிகரமாக இருந்து பணியாற்றினார்கள். வடக்கு தெருவை சேர்ந்த பொது நலப்பணிகள் செய்து வரும் ஜனாப் வாஹித் அவர்கள் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்தார்கள்.





கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கு(குப்பை கொட்டும் இடம்) கட்டும் பணி தீவிரம்:


துணைத்தலைவர்
 H.ஹாஜா முகைதீன்
21 வது வார்டு கவுன்சிலர்
D.ஜெயப்பிரகாஷ்











கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கு ரூ. 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் இப்பணி முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. ரூ. 53 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் கீழக்கரை நகர் முழுவதும் குப்பைகள் தினசரி அகற்றப்ப்ட்டு சுகாதாரம் முழுமையாக அமுல்படுத்தப்படும்.



Saturday 17 March 2012

கீழக்கரையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட வினியோகம்:

கீழக்கரையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட வினியோகம் துணைத் தலைவர் H.ஹாஜா முகைதீன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது:

 கீழக்கரையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட கார்டு யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் வினியோகம் செய்யப்பட்டது. R.சுரேஷ் குமார் மவட்ட ஒருங்கிணைப்பாளர், S.நாக குமார் தகவல் தொடர்பு அதிகாரி மற்றும் D.செந்தில் நாதன் மாவட்ட புகைபடம் எடுக்கும் அதிகாரி ஆகியோர் இப்பணியை மேற்கொண்டார்கள்.


கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர் ஜனாப் H.ஹாஜா முகைதீன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். நகராட்சி கவுன்சிலர்கள் S.Aஅனவர் அலி, MUV.முகைதீன் இப்ராகீம் மற்றும் S.அஜ்மல் கான் ஆகியோர் உடன் இருந்தனர். இன்று கீழக்கரை நகர் மக்களுக்கு ஆயிரம் கார்டுகள் வழங்கப்பட்டது. மேலும், தொடர்ந்து கார்டுகள் வழ்ங்கும் பணி நடைபெறும்.

Wednesday 14 March 2012

கீழை நகர் வளர்ச்சி பணிகளில் கீழக்கரை நகராட்சி

துணைத்தலைவர்

  1. கீழக்கரை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் புதிய குடிநீர் பைப்லைன் ரூ.1 கோடி செலவில் அமைக்க டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது
  2. புதிய வாருகால் அமைக்கும் பணிக்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்க டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
  3. உரக்கிடங்கு (குப்பை கொட்டும் இடம்) சுற்றுச்சுவர் மற்றும் சிமெண்ட் தளம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்க டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி செலவில் கொடுக்கப்பட்டுள்ள இந்த பணிகள் நகர்மன்ற ஒப்புதலுக்கு பின் 1.04.2012 முதல்  தொடங்கப்பட உள்ளது.




இந்த வளர்ச்சி பணிகளை தொடர்ந்து கீழக்கரை நகருக்கு புதிய 10 லட்சம் லிட்டர் கொள்ளலவு உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அந்த பணியும் தொடங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.



Tuesday 13 March 2012

கவனிப்பாரா கீழக்கரை நகராட்சி கமிஷனர்?

கீழக்கரை AMS பெட்ரோல் பங்க் கடற்கரை ரோட்டின் அவல நிலை இதோ:-
                                       

                                    


இது சம்மந்தமாக 8 வது வார்டு கவுன்சிலர் பாவா என்ற செய்யது கருணை கூறுகையில்:- 

கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜிபூர் ரஹ்மான் 10 நட்களுக்கு ஒருமுறை  தான் கீழக்கரை வருகின்றார் அதுவும் ஒரு சில மணிநேரம் மட்டும் அலுவலகத்தில் இருக்கின்றார். நகரின் சுகாதாரத்தை பார்த்துக்கொள்ளும் ஆய்வாளர் இடம் காலியாக உள்ளது. ஆகவே, கீழக்கரை நகராட்சிக்கு நிரந்தரமான கமிஷனர், சுகாதார ஆய்வாளர் விரைவில் நியமிக்க பட வேண்டும். பொது சுகாதார துப்புரவு பணியாளர்கள் பற்றாகுறை விரைவில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Monday 12 March 2012





கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கில்(குப்பை கொட்டும் இடம்) சுற்று சுவர் அமைக்கப்படுவதை கீழக்கரை நகராட்சி துணைத்தலைவர் H.ஹாஜா முகைதீன் அவர்கள் 5 வது வார்டு கவுன்சிலர்  M.சாகுல் ஹமீது அவர்கள் 7 வது வார்டு கவுன்சிலர் S.A அன்வர் அலி அவர்கள்  8 வது வார்டு கவுன்சிலர் K.செய்யது கருணை  10 வது வார்டு கவுன்சிலர் S.அஜ்மல் கான் அவர்கள் 20 வது கவுன்சிலர் A.H ஹாஜா நஜ்முதீன் அவர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர் இவர்களுடன் சமூக ஆர்வலர்கள் M.செய்யது ரியாஸ்தீன் அவர்கள் பத்திரிக்கையாளர் சுலைமான் அவர்கள் kilakaraivicechairman இணையதள ஆலோசகர் KVC.வேலுச்சாமி அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Friday 9 March 2012


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அன்புடையீர்,
              கீழக்கரை நகரின் மிக முக்கியமான பொது சுகாதார பிரச்சனையான குப்பைகள் கொட்ட இடமில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. கீழக்கரை நகராட்சியில் கடந்த நிர்வாகத்தால் கிடப்பில் போடப்பட்டு இருந்த உரக்கிடங்கு (குப்பைகள் கொட்டும் இடம்) சுற்றுசுவர் கட்டும் பணியை நகர் மக்களின் நலனை கருத்தி ல்கொண்டு  மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணைப் படி நகர்மன்ற துணைத்தலைவர் ஜனாப் H.ஹாஜா முகைதீன் அவர்கள், நகர்மன்ற தலைவர் ஜனாபா ராவியத்துல் கதரியா அவர்கள் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் அவர்களுடைய கூட்டு முயற்சியால் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.  

            கீழக்கரை நகர் மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இவர்களின் சிறப்பான பணி தொடர அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்வோம். 
வெளிநாடுகளில் பணியில் உள்ள நம் சகோதரர்கள் கீழக்கரை நகர் மக்களுக்காக கீழக்கரை நகராட்சி மூலம் நடைபெறும் திட்டப்பணிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள kilakaraivicechairman.blogspot.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. என்பதை இத்தருணத்தில் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
    இவண்,
 லெப்பைதம்பி          




                                                        

         
கீழக்கரை நகராட்சியின் உரக்கிடங்கு (குப்பைகள் கொட்டும் இடம்) சுற்று சுவர் கட்டுமானப் பணியை பார்வையிடும் கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் H.ஹாஜா முகைதீன்.